அசாதாரன நிலமைகள் மாற்றப்பட்டு அனைத்து பீடங்களுக்குமான கற்றல் செயற்பாடுகளை மீளவும் முழுமையாக ஆரம்பிக்கப்படும் – பேராசிரியர் மெகான் டிசில்வா

448 0

DSC_0281யாழ்.பல்கலைக்கழக மாணவர்களிடையே இடம்பெற்ற மோதல் சம்பவத்தினால் ஏற்பட்டிருந்த அசாதாரன நிலமைகள் மாற்றப்பட்டு அனைத்து பீடங்களுக்குமான கற்றல் செயற்பாடுகளை மீளவும் முழுமையான ஆரம்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூரணப்படுத்தப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மெகான் டிசில்வா தெரிவித்தார்.

மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில் அனைத்து மாணவர்களும் அச்சமில்லாமல் மீண்டும் வந்து தமது கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடலாம் என்றும் அவர் நம்பிக்கை ஊட்டியுள்ளார்.கடந்த 16 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்.பல்கலைக்கழ விஞ்ஞான பீடத்தின் புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இரு மாணவர் குழுக்களுக்க இடையில் மோதல் நடைபெற்றிருந்தது.

மோதல் காரணமாக பல்கலைக்கழகத்தின் கற்றல் செயற்பாடுகள் நிறுத்திவைக்கப்பட்டு தற்போது பகுதி பகுதியாக மீண்டும் கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முழுமையான கற்றல் செயற்பாடுகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.இந்நிலையில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களிடையே இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் பின்னரான நிலமைகள் தொர்பாக ஆராய்வதற்காக பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்கழுவின் தலைவர் பேராசிரியர் மொகான் டிசில்வா தலமையிலான 5 ஆணையாளர்கள் அடங்கிய குழுவினர் யாழ்.பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.

இங்கு வந்த அவர்கள் யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பீடாதிபதிகள், பேரசிரியர்கள் மற்றும் ஆலோகசர்களை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றினை நடாத்தியிருந்தனர். இக் கலந்துரையாடல் யாழ்.பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் உள்ள மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.குறித்த கலந்துரையாடல் முடிந்த பின்னர் அங்கு ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இச் சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களினால் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-

யாழ்.பல்கலைக்கழகமானது இதுவரை காலமும் சிறந்த முறையில் இயங்கி வந்திருந்தது. இருந்த போதும் அண்மையில் இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் ஒரு மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இருப்பினும் அது ஒரு சிறு மோதல் சம்பவமாகும்.இம் மோதல் சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் சரியான நேரத்தில் சரியான சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட முடிவால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது. தற்போது பல்கலைக்கழகத்தின் நிலமை சுமுகமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பகுதியளவில் மாணவர்களுடைய கற்கைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது யாழ்.பல்கலைக்கழகத்தின் பொறியியல், மருத்துவம், விவசாயம், சித்த மருத்துவம் மற்றும் வவுனியா வளாக்தில் நடைபெறும் கற்கைநெறிகள் முழுமையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆரம்பிக்கப்பட்ட கற்கைநெறிகளின் மாணவர்கள் 100 வீதம் வருகைதந்து தமது கற்றல் செயற்பாடுகளை மீளவும் ஆரம்பித்துள்ளனர்.மேலும் விஞ்ஞான பீடம், கலைப்பீடம் மற்றும் முகாமைத்துவ பீடம் ஆகியவற்றில் கற்றல் செயற்பாடுகளும் உடனடியாக ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மிக விரைவில் இப் பீடங்கள் ஆரம்பிப்பதற்கான அறிவித்தல்கள் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் விடுக்கப்படும்.

யாழ்.பல்கலைக்கழகத்தில் தற்போது எந்தப் பிரச்சினைகளும் இல்லை. மாணவர்கள் கல்வி கற்பதற்கான பிரச்சினைகளும் இல்லை. பாதுகாப்புப் பிரச்சினைகளும் இல்லை.ஆரம்பிக்கப்பட்ட பீடங்களில் மாணவர்கள் ஒன்றாக இணைந்து கல்வி கற்கின்றார்கள். அவர்களும் சுமந்திரமாக முன்னர் இருந்தது போல் தமது செய்ற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்கள். எனவே பல்கலைக்கழகத்தில் இருந்த அச்சமான சூழல் முற்றாக நீக்கப்பட்டுவிட்டது.

எனவே யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்வதற்கான நாடு முழுவதிலும் இருந்து வரும் மாணவர்கள் அச்சமில்லாமல் கல்வியினை தொடரக்கூடிய நிலை உள்ளது. எனவே அனைத்து மாணவர்களுடைய பெற்றோரும் தமது பிள்ளைகளை அச்சம் இல்லாமல் பல்கலைக்கழகத்திற்க அனுப்பிவையுங்கள் என்றும் அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.