அதிகாரப் பரவலாக்கலை கோரும் தமிழர்களை உதாசினம் செய்யும் மத்திய அரசாங்கம் எங்களை தமது கையாட்களாக நடாத்துகின்றது என்று யாழ்.வந்த உலக வங்கி பிரதிநிதிகளிடம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.உலக வங்கிப் பிரநிதிதிகள் அடங்கிய குழுவினர் யாழ்ப்பாணத்திற்காக விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது யாழ்.மாவட்டத்தில் மேற்கொள்ப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.இக் கலந்துரையாடலின் முடிவில் ஊடகங்களுக்கு முலமைச்சர் தருத்து தெரிவிக்கும் போதே மேற்படி விடயங்கள் தொடர்பாக தான் கூட்டிக்காட்டியதாக தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-மத்திய அரசாங்கம் மாணாக அரசாங்கத்தினை பொருட்படுத்துவதாக இல்லை. பலவிதங்களிலும் எங்களை உதாசினங்கள் செய்து வருகின்றார்கள்.
மத்திய அரசாங்கத்துக்கும், மாகாண அரசாங்கத்திற்கும் இடையில் உரிய புரிந்துணர்வுடன் நடக்கின்ற மனோபாவம் இல்லாத காரணத்தினால் பல்வேறு வேலைத்திட்டங்களை செய்து கொள்ள முடியாமல் உள்ளது.தமிழ் மக்கள் அதிகார பரவலாக்கலை எதிர்பார்க்கின்ற போது வெறுமனே மத்திய அரசாங்கத்தின் கையாட்களாக எங்களால் வேலைசெய்ய முடியாதுஎங்களுக்குள்ளே போதுமான புரிந்துணர்வு இருக்கின்றது ஆனால் இப்புரிந்துணர்வினை அரசாங்கத்திற்கு எடுத்துரைப்பதில்தான் பிரச்சினை இருக்கின்றது.
நாங்கள் மத்திய அரசாங்கத்திற்க எத்தனையோ முறை, எத்தனையோ விதங்களில் இது தொடர்பாக தெளிவுபடுத்தல்களை வழங்கியுள்ளோம். குறிப்பாக தமிழ் மக்களுக்க தேவையான விடையங்களை மாகாண சபைகளுடன் இணைந்து செய்யுங்கள், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ததுக் கொள்வதற்கு கட்டுப்பாடுகள் விததிக்காமல் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இடமளியுங்கள் என்றும் கூறியுள்ளோம். ஆனால் இதனை மத்திய அரசாங்கம் செவிமடுப்பதாக இல்லை என்று முதலமைச்சர் கூறியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த உலக வங்கி பிரதிநிதிகள் நாட்டில் உள்ள உள்ளுராட்சி மன்றங்கள் சரியான முறையில் கூடிய வலுவுடம் மக்களுக்கான வேலை செய்யப வேண்டுமானால் அங்கு அதிகாரப்பரவலாக்கல் என்பது முக்கியமான ஒன்றாகும் என்று அவர்கள் கூறியனர் என்று முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.


