பொலிஸ் நிலையத்திற்குள் போதைப்பொருள் பயன்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் பணி இடைநீக்கம்!

119 0

பொலிஸ் நிலையத்திற்குள் கஞ்சா போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கராப்பிட்டி வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக  அனுப்பப்பட்ட நிலையில் இவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சந்தேக நபர் காலி பொலிஸ் அத்தியட்சகரான சனத் அமரசிங்கவினால் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.