சென்னை அண்ணா பல்கலை.யில் ரூ.50 கோடியில் தொழில்நுட்ப பூங்கா

38 0

 சென்னை அண்ணா பல்கலை.யில் அண்மையில் சிண்டிகேட் கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து பேராசிரியர்கள் சிலர் கூறியதாவது: பல்கலை. வளாகத்தில் புதிதாக தொழில்நுட்பப் பூங்கா கட்ட இக்கூட்டத்தில்ஒப்புதல் பெறப்பட்டது. ரூ.50 கோடியில், 2.80 லட்சம்சதுரஅடியிலான இந்தப் பூங்கா 2 ஆண்டுகளுக்குள்கட்டிமுடிக்கப்படும். இதில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், சமீபத்தில் உயர்த்தப்பட்ட தேர்வுக் கட்டணத்தை திரும்பப் பெறுவதற்கான அனுமதியும் கூட்டத்தில் பெறப்பட்டுள்ளது.

பல்கலை. வளாக கல்லூரிகளில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களின் பிள்ளைகள் சில படிப்புகளில் மட்டுமே சேர ஆர்வம் காட்டுகின்றனர். எனவே, மற்ற படிப்புகளில் சேருவோருக்கு கல்விக் கட்டணத்தில் 50 சதவீதம் வரை சலுகை வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.