பில்லியர்ட்ஸ் விளையாட ஈரான் வீராங்கனைகளுக்கு ஓராண்டு தடை

219 0

ஈரான் வீராங்கனைகள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் பில்லியர்ட்ஸ் போட்டிகளில் பங்கேற்க ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் சமீபத்தில் பில்லியர்ட்ஸ் விளையாட்டுப் போட்டி நடந்தது. அதில் ஈரானை சேர்ந்த வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

அதில் இஸ்லாமிய சட்ட விதிமுறைகள் மீறப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அது குறித்து ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி கூடி விவாதித்தது.

கூட்டத்தில் பில்லியர்ட்ஸ் வீராங்கனைகள் விதிமுறைகளை மீறியது உறுதி செய்யப்பட்டது. எனவே அவர்கள் உள் நாடு மற்றும் வெளி நாடுகளில் நடைபெறும் பில்லியர்ட்ஸ் போட்டிகளில் பங்கேற்க ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

1979-ம் ஆண்டு நடை பெற்ற புரட்சிக்கு பிறகு ஈரானில் இஸ்லாமிய சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதன்படி பெண்கள் பொது இடங்களில் தலையில் முக்காடு அணிய வேண்டும். தனது குடும்ப ஆண்களை தவிர மற்றவர்களுடன் தொட்டு பேசவோ, நடனமாடவோ கூடாது.