குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை அடையாளம் காண தானியங்கி இயந்திரம்

136 0
குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடிய நபர்களை அடையாளம் காண்பதற்காக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தானியங்கி முக அடையாளம் காணும் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் இந்த அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.

எந்தவொரு சட்ட விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடிய எந்தவொரு வெளியேறும் அல்லது வருகை தரும் நபர்களை அடையாளம் காண இதன் ஊடாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.