ஹாலி – எலயில் மண் மேடு சரிந்து விழுந்ததில் பெண் காயம்

56 0
ஹாலி – எல பிரதேசத்தில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றின் வீடுகளின் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் ஹாலி – எல பிரதேசத்தை சேர்ந்த பழனியப்பன் தெய்வானி என்ற 60 வயதுடைய பெண்ணாவார்.

இவர் காயமடைந்த நிலையில் அடம்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் தனது வீட்டில் சமையல் அறையில் உணவு தயாரித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.