யாழில் கடற்தொழிலுக்கு சென்றவர் திடீர் சுகவீனமுற்று உயிரிழப்பு

142 0

யாழில் கடற்தொழிலுக்கு சென்றவர், திடீர் சுகவீனமுற்ற நிலையில் கரைக்கு அழைத்து வரப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த அன்ரனி ஜூட் (வயது 42) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடற்தொழிலுக்காக மேலும் மூவருடன் கடலுக்கு சென்ற நிலையில் , வியாழக்கிழமை (4) அதிகாலை 3 மணியளவில் திடீரென சுகவீனமுற்றுள்ளார். அதனை அடுத்து ஏனையவர்கள் படகினை திருப்பி கரைக்கு கொண்டு வந்து அவரை யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வியாக்கிழமை (4) உயிரிழந்துள்ளார்.