குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்பில் வைக்கப்பட்டுள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான ஹரக்கட்டாவின் விசாரணையில் தாம் திருப்தியடையவில்லை என பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் நேற்று வியாழக்கிழமை (04) தெரிவித்துள்ளார்.
ஹரக்கட்டா தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிவதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்றிருந்த நிலையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஹரக்கட்டா நீண்டகாலமாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த போதிலும் அவருக்கு எதிரான விசாரணைகள் மிகவும் மந்தகதியில் இடம்பெறுவதை தென்னகோன் அவதானித்துள்ளார்.
இதனடிப்படையில், விசாரணை அதிகாரிகளின் பாரிய பிழைகளை சுட்டிக் தென்னகோன், ஹரக்கட்டபவுக்கு எதிரான விசாரணைகளுக்காக 3 மேலதிக பொலிஸ் குழுக்களை முழு நேர விசாரணைகளுக்காக ஈடுபடுத்த ஏற்பாடு செய்துள்ளார்.

