வவுனியாவிற்கான அபிவிருத்தி குழு கூட்டத்தினை நடத்துவதற்கு நாளை வெள்ளிக்கிழமை (05) செல்லும் வவுனியா மாவட்ட செயலாளருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்ப்பு தெரிவிக்க கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரினால் வவுனியாவைச் சேர்ந்த சிலருக்கு நீதிமன்றத்தினூடாக தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கங்களின் தலைவர், செயலாளர்கள் முன்னாள் அரசியல் கைதியும் போராளிகள் நலன்புரி சங்கத்தின் வவுனியா மாவட்ட தலைவர் அரவிந்தன் ஆகியோருக்கும் குறித்த தடை உத்தரவு பெறப்பட்டிருந்ததுடன் அதன் பிரதிகள் இன்று வியாழக்கிழமை (04) அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை ஜனாதிபதி வவுனியாவிற்கு வருகை தந்த போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் மேற்கொள்ளப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

