வஜிர அபேவர்தன வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு Published By: DIGITAL DESK 3

112 0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் யாழ்ப்பாண விஜயத்துடன் இணைந்து அமுல்படுத்தவுள்ள வேலைத்திட்டம் தொடர்பில் வடமாகாண ஆளுநர், அரச உயர் அதிகாரிகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தனவினால் விளக்கமளிக்கப்பட்டது.

இதன்போது, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாதசுந்தரன் உள்ளிட்டவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இங்கு வடக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர் மட்டத்திற்கு கொண்டு வருவதுடன் எதிர்காலத்தில் அமுல்படுத்தப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது