மட்டு. வாழைச்சேனையில் விசேட அதிரடிப்படை முற்றுகை ; போதைப்பொருள், பணம் மீட்பு ; 3 பேர் கைது

105 0
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறந்துறைச்சேனையில் போதை பொருள் வியாபாரிகளது வீட்டை நேற்று செவ்வாய்க்கிழமை (2) இரவு விசேட அதிரடிப்படை முற்றுகையிட்டு சோதனை செய்தனர்.

அதில், 980 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 40 மில்லிகிராம் ஹெரோயினுடன்  3 பேரை கைது செய்தனர். அத்துடன்,  12 இலச்சத்து 22 ஆயிரத்து 300 ரூபாவும் இரண்டு கையடக்க தொலைபேசிகளை மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களையும் சான்று பொருட்களையும் விசேட அதிரடிப்படையினர் தம்மிடம் ஒப்படைத்துள்ளதாகவும் இவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக வாழைச்சேனை  பொலிஸார் தெரிவித்தனர்.