இந்த பொதியானது சீதுவையில் உள்ள நிறுவனம் மூலம் விமான தபால் சேவை வழியாக நேற்று செவ்வாய்க்கிழமை (02) கொண்டு வரப்பட்டுள்ளது.
குறித்த பொதிகளை பெற்றுக்கொள்ள வந்த சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பொதியிலிருந்து 4 கிராம் 919 மில்லி கிராம் நிறையுடைய ஹேஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

