கிழக்கையும் பல்லாயிரம் தொழிலாளர்களின் வாழ்வையும் வளமாக்கும் மட்டக்களப்பு பிராண்டிக்ஸ்

147 0
‘ஆள் பாதி, ஆடை பாதி’ என்பார்கள். ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் ஆடை அந்தளவுக்கு முக்கியத்துவமானதாக இருக்கின்றது. அதுபோலவே, இலங்கைப் பொருளாதாரத்தைப் பொறுத்தமட்டில் தைத்த ஆடைக் கைத்தொழிலானது அவ்வாறான ஒரு முக்கிய வகிபாகத்தையே கொண்டுள்ளது.

அந்த வகையில், 1969 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட பிராண்டிக்ஸ் நிறுவனமானது, இலங்கை ஆடைக் கைத்தொழில் துறையில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

தற்போது இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், ஹெய்டி, கம்போடியா ஆகிய நாடுகளில் தொழிற்சாலைகளைக் கொண்டியங்கும் இந்நிறுவனத்தில் உலகெங்கும் சுமார் 60 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர்.

இலங்கையில் 15 இற்கு மேற்பட்ட தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள பிராண்டிக்ஸ், நாட்டின் ஏற்றுமதி வருமானத்திற்கும், மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் கணிசமான பங்களிப்பை வழங்குகின்றது.

அதுமட்டுமன்றி,தமது தொழிற்சாலைகளில் தொழில்புரிகின்ற பல்லாயிரக்கணக்கான பணியாளர்களின் வாழ்க்கையையும் வளமாக்கியுள்ளது என்றால் மிகையில்லை.

பிராண்டிக்ஸ் நிறுவனமானது சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலான நிலைபேண்தகு உற்பத்தி நடவடிக்கைகளையும், சிறந்த தொழிற்பாட்டு நடைமுறைகளையும் கடைப்பிடித்து வருகின்றது, ‘பசுமைக் கருத்திட்ட’ அடிப்படையிலான கட்டிட அமைப்பு, ‘சேர்வோ’ ரக மோட்டர் பொருத்தப்பட்ட தையல் இயந்திர பயன்பாடு, சூரிய சக்தி மின்சார உற்பத்தி, கழிவுநீரை மீளப் பயன்படுத்தும் முறைமை உள்ளடங்கலாக பல்வேறு விசேட கருத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

இந்த வரிசையில், ‘பூச்சிய காபன் வெளியேற்ற அந்தஸ்தை’ பெற்றுக் கொண்ட உலகின் முதலாவது தொழிற்சாலை என்ற பெருமையை மட்டக்களப்பு பிராண்டிக்ஸ் தொழிற்சாலை 2019ஆம் ஆண்டு பெற்றுக் கொண்டது.

இவ்வாறான சிறப்பம்சங்களுக்காக மட்டுமன்றி, கிழக்கு மாகாணத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலை என்பதற்காகவும் மட்டக்களப்பு பிராண்டிக்ஸ் முக்கியத்துவம் பெறுகின்றது.

பிராண்டிக்ஸ் நிறுவனம் 2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு, புணானை பிரதேசத்தில் தொழிற்சாலையை நிறுவியதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் காலடி பதித்தது. அங்கு அப்போது சுமார் 600 பேர் பணிபுரிந்தனர்.

அதன் பிறகு 2012இல் அத் தொழிற்சாலை மட்டக்களப்பு கள்ளியங்காடு பிரதேசத்திற்கு மாற்றப்பட்டதுடன் 1400 ஊழியர்களுக்கு வேலை கிடைத்தது.

பின்னர், 2017ஆம் ஆண்டு தற்போது தொழிற்சாலை அமைந்துள்ள ஆரையம்பதி பிரதேசத்திற்கு மாற்றப்பட்டது.

1400 ஊழியர்களுடன்  தொழிற்பாட்டை ஆரம்பித்த இத் தொழிற்சாலை இன்று சுமார் 3500 இற்கு மேற்பட்டோர் தொழில் புரியும் இடமாக பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது.

மிக விசாலமான நிலப்பரப்பில் அமைந்துள்ள மட்டக்களப்பு, பிராண்டிக்ஸ் தொழிற்சாலை பல சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு வழங்குவது ஒருபுறமிருக்க மறுபுறத்தில் இங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்க்கையையும் வளமாக்கியுள்ளது எனலாம்.

நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக பல அழிவுகளைச் சந்தித்த  கிழக்கு மாகாணத்தில் அப்போது பெரிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டிருக்கவில்லை.

இதுபோன்ற தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்படவும் இல்லை. குறிப்பாக கிராமப்புற யுவதிகளுக்கு தொழில் என்பது ஒரு கனவாகவே இருந்தது.

இவ்வாறான ஒரு சூழலில் மட்டக்களப்பில் ஒரு பிரமாண்டமான ஆடைத் தொழிற்சாலையை பிராண்டிக்ஸ் நிறுவியதன் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் தொழிலொன்றை பெற்றுக் கொள்ள வாய்ப்புக் கிடைத்தது.

இதன்மூலம் அவர்களது குடும்பங்களுக்கும் ஒரு வாழ்வாதாரம் கிடைத்தது என்பதை மறுக்க முடியாது.

மட்டக்களப்பு தொழிற்சாலையில் பணிபுரிவோரில் பெரும்பாலானவர்கள் இம் மாவட்டத்தின் சுமார் 50 சிறிய கிராமங்களைச் சேர்ந்தவர்களாவர். அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த சிலரும் உள்ளனர். மொத்தப் பணியாளர்களுள் 90 சதவீதமானோர் பெண்களாவர்.

கணவனை இழந்த தாய்மார், தனியே குடும்பத்தை கவனிக்கும் பெண்கள், பின்தங்கிய நிலையில் உள்ள யுவதிகள் இவர்களுள் கணிசமானவர்கள் ஆவர்.

கிராமப்புற இளைஞர், யுவதிகள் வேலைவாய்ப்பை பெற்றுக் கொண்டதன் மூலம் நிரந்தர மாத வருமானம் ஒன்றை பெறுவதற்கு முடிந்தது. அத்துடன் அவர்கள் வெளியுலகைக் காண்பதற்கான கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

நவீன தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்ள, திறமைகளை வளர்த்துக் கொள்ள, சிறந்த அனுபவத்துடன் தொழில்சார் முன்னேற்றங்களை அடைந்துகொள்ள அவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது எனலாம்.

இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக முழுமையான போக்குவரத்து வசதிகள், காப்புறுதி, விசேட வெகுமதிகள் போன்றன வழங்கப்படுகின்றன.

உளவள ஆலோசனைச் சேவை, நலனோம்பு வசதிகள் மற்றும் அவசர மருத்துவ சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சமூகநல பொறுப்பு திட்டங்களையும் நிறுவனம் முன்னெடுக்கின்றது.

இதேவேளை, தொழில் சூழலில் பணியாளர்கள் எதிர்கொள்கின்ற சிக்கல்கன், நெருக்கடிகளை நியாயமான முறையில் தீர்த்து வைப்பதற்கும், ஒரு பண்பட்ட கலாசாரம், ஒழுக்கம், நெறிமுறை, பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பிராண்டிக்ஸ் கூறுகின்றது.

ஆகவே, பல சிறப்பம்சங்கள் கொண்ட ஒரு பிரமாண்ட தொழிற்சாலை மட்டக்களப்பில்; இயங்குவது இப்பகுதி மக்கள் பெருமைப்படக் கூடிய விடயம் என்று கூறலாம்.

பல்லாயிரம் பேருக்கு தொழிலையும் துறைசார்ந்த அறிவையும் வழங்குவதன் மூலம் ஒவ்வொரு குடும்பத்திலும் சாதகமான விளைவுகளை பிராண்டிக்ஸ் ஏற்படுத்துகின்றது.

இத் தொழிற்சாலையின் தொழிற்பாடுகள் பற்றி பிராண்டிக்ஸ் நிறுவனத்தின் கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான பணிப்பாளர் செந்தில் ஈஸ்வரன் விளக்கமளிக்கையில்,

“நாம் ஆடை உற்பத்திகளில் மட்டுமன்றி, ஊழியர்கள் தொடர்பான விடயங்களிலும் தராதரத்தையும் நியமத்தையும் பேணி வருகின்றோம். நெறிமுறைகளும் கட்டுக்கோப்பும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது” ,“இத் தொழிலாளர்களின் வாழ்வில் ஒரு சிறு ஒளியையாவது ஏற்றி வைத்ததையிட்டு எமது நிறுவனம் திருப்தி கொள்கின்றது.

அதேநேரம், இங்கு பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் எங்களது பிள்ளைகளை, சகோதரிகளைப் போன்றவர்கள். எனவே எல்லா விதத்திலும் அவர்களது நலன்களில் முழுக் கவனம் செலுத்தி வருகின்றோம்” ,“அனைத்து வசதிகளையும் கொண்ட நவீன தொழிற்சாலையொள்றில் அவர்கள் தொழில் புரிகின்றார்கள்.

போக்குவரத்து வசதி, பகல் அல்லது இரவு வேளை உணவு வசதி, சுகாதார வசதி, காப்புறுதி வசதி,ஊழியர் சேமலாப நிதிய கொடுப்பனவு உட்பட அனைத்து நலன்பேணல் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, 3 முழுநேர உளவள ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் முறைப்பாடுகளை செய்வதற்காக நேரடியாக உயர் அதிகாரிகளின் தொடர்பு இலக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன” அமைந்தது. அதனால், ஆடைத் தொழிற்துறையிலும் தாக்கங்கள் ஏற்பட்டன.

இந்த சந்தர்ப்பத்தில் எமது ஊழியர்கள், இப்பகுதி மக்கள் எமக்கு மிகுந்த ஒத்துழைப்பு வழங்கினார்கள். மறுபுறத்தில் நாங்களும் ஊழியர்களின் தொழில் ஸ்திரத்தன்மையை கூடுமானவரை உறுதிசெய்துள்ளோம்” என்று கூறினார்.

“உற்பத்தித் தொழிற்பாட்டில் வினைத்திறனையும் தராதரத்தையும் மேம்படுத்துவதற்காக தொடர்ச்சியாக நவீன தொழில்நுட்பங்களை உள்வாங்கும் பிராண்டிக்ஸ் நிறுவனம், ‘ஸ்மாட் தொழிற்சாலை’ கருத்திட்டத்தை ஏற்கனவே கட்டுநாயக்க தொழிற்சாலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த வரிசையில் அடுத்ததாக மட்டக்களப்பு தொழிற்சாலையிலும் இது அறிமுகப்படுத்தப்படவுள்ளது.”

“அதிநவீன டிஜிட்டல் தன்னியக்கமாக்கல் வசதிகளுடன் ஒரு ‘ஸ்மாட் தொழிற்சாலையாக’ இது மாற்றப்படுவதன் ஊடாக, இங்கு உற்பத்திச் செயன்முறை பற்றிய தரவுகளை உடனுக்குடன் பெற்றுக் கொள்தற்கும், அதன்மூலம் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும் முடியும்.

அத்துடன் தொழிலாளர்கள் மேலும் அதிநவீன தொழில்நுட்ப அறிவை பெற்றுக் கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும் என்றும்” பணிப்பாளர் செந்தில் ஈஸ்வரன் மேலும் குறிப்பிட்டார்.

பொதுவாக தொழிற்சாலைகள், வியாபார முயற்சிகள் பற்றி சமூகத்தில் பல்வேறு கண்ணோட்டங்கள் இருக்கலாம். ஆனால் அதனையெல்லாம் தாண்டி, மட்டக்களப்பு பிராண்டிக்ஸ் தனித்துவமானது எனலாம். ஏனெனில், இது தேசிய பொருளாதாரத்திற்கு மட்டுமன்றி, கிழக்கு மாகாணத்திலும், அங்கு பணிபுரிகின்ற ஊழியர்களிலும் ஏற்படுத்தியுள்ள சாதகமான தாக்கங்கள் பெறுமதியானவை ஆகும்.