நாட்டின் தற்போதைய நிலையில் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பதன் மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியும்.
ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடப்போவதாக தெரிவிப்பவர்களால் நாட்டில் என்ன செய்ய முடியும் என கேட்கிறோம். அத்துடன் யுத்தத்தை வெற்றிகொண்ட மஹிந்த ராஜபக்ஷ் தற்போது நாட்டின் பொருளாதாரத்தை வெற்றிகொள்ளவே ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்து வருகிறார் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக தற்போது பலரும் தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறு தெரிவிப்பவர்கள் தேர்தலில் வெற்றிபெற்றால் அவர்களால் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப என்ன செய்ய முடியும்?.இவர்களின் ஏமாற்று பேச்சுக்களுக்கு மக்கள் மீண்டும் ஏமாந்துவிடக்கூடாது.
அதேநேரம் போராட்ட காலத்தில் மொட்டு கட்சி மக்களுக்கு அடிபணிந்து செயற்பட்டபோதும் சர்வதேசத்தின் கோரிக்கைக்கைக்கு அடிபணியாமல் எடுத்த தீர்மானத்துக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்றார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் செவ்வாய்க்கிழமை (02) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

