மொசூல் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள்: வல்லரசு நாடுகளுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அழைப்பு

382 0

ஈராக்கின் மொசூல் நகரில் இருந்து வெளியேறும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள் என்று வல்லரசு நாடுகளுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ கட்டாரஸ் அழைப்பு அழைப்பு விடுத்துள்ளார்.

ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மேற்கு மொசூல் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர். அதனை மீட்பதற்காக கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து ராணுவம் அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அவர்களுக்கு உதவியாக அமெரிக்கா தலைமையிலான சர்வதேச கூட்டுப்படையும் விமான தாக்குதல் நடத்துகிறது. இந்த தாக்குதலின்போது தீவிரவாதிகள் மட்டுமின்றி, பொதுமக்கள் தரப்பிலும் அதிக அளவிலான உயிர்ப்பலி ஏற்பட்டு வருகிறது.

இந்த சண்டை காரணமாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 3 லட்சத்து 55 ஆயிரம் பொதுமக்கள் மொசூல் நகரில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களுக்கு ஈராக் அரசு முகாம்கள் அமைத்து தங்கவைத்துள்ளது. இன்னும் 4 லட்சம் பேர் மொசூல் நகரில் சிக்கி இருக்கின்றனர்.

இந்நிலையில், மொசூல் நகரில் இருந்து வெளியேறும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள் என்று வல்லரசு நாடுகளுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ கட்டாரஸ் அழைப்பு அழைப்பு விடுத்துள்ளார்.

மோசூல் நகருக்கு வெளியே உள்ள முகாம்களை கட்டாரஸ் பார்வையிட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கட்டாரஸ், “மொசூல் மக்களுக்கு உதவி செய்ய எங்களிடம் போதிய பொருள் வசதி இல்லை. 8 சதவீதம் தான் பொருள்வசதி உள்ளது” என்றார்.

ஐ.நா.வும், ஈராக் அரசும் இணைந்து மொசூல் நகரில் இருந்து வெளியேறும் மக்களுக்காக முகாம்களை கட்டி வருகின்ற போதிலும், அவர்களுக்கு உதவி போதிய வசதி இல்லை.