களுத்துறை – வெலிபென்ன, பல்லேகொட வீதியில் ஆண் ஒருவரின் சடலம் வெலிபென்ன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 35 முதல் 40 வயதுக்குட்பட்ட நபரொருவராவார்.
குறித்த சடலம் களுத்துறை – நாகொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிபென்ன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

