இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த ஜீப் மீது தாக்குதல்

39 0
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த ஜீப் மற்றுமொரு காருடன் மோதி விபத்துக்குள்ளானதையடுத்து, வாகனத்தில் பயணித்தவர்கள் அமைச்சரின் வாகனத்தை தாக்கிச் சேதப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தங்கொட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக இராஜாங்க  அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் சென்று கொண்டிருந்தபோதே மாரவில மொதரவெல்ல தேவாலயத்துக்கு  முன்பாக இன்று வெள்ளிக்கிழமை (29) இந்த விபத்து இடம்பெற்றதனையடுத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.