யாழ்.பல்கலை கலைப்பீட மாணவர்களால் விதிக்கப்பட்டிருந்த வகுப்புத் தடையை, இடைநிறுத்துவதற்கு பரிந்துரை

319 0

யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் கலைப்பீட மாணவர்கள் சிலர் மீது பல்கலைகழகத்தால் விதிக்கப்பட்டிருந்த வகுப்புத் தடையை, ஒழுக்காற்று விசாரனை அறிக்கை வெளிவரும் வரையில் இடைநிறுத்துவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைகழக கலைப்பீட சபை, யாழ்ப்பாண பல்கலைகழக துனைவேந்தருக்கு இவ்வாறு பரிந்துரை செய்துள்ளது.

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற பத்திரிகையாளர்

சந்திப்பின் போதே கலைப்பீட பீடாதிபதி க.சுதாகர் இந்த விடயத்தை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் துணைவேந்தருக்கான தமது பரிந்துரை தொடர்பில் கலைப்பீட பீடாதிபதி குறிப்பிடுகையில்,
கடந்த 11ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைகழக இரண்டாம் வருட கலைப்பீட மாணவர்கள் தமது பீடத்தின் முதலாம் வருட கலைப்பீட மாணவர்களை வரவேற்பதற்கான வரவேற்ப்பு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த நிகழ்வுக்கு முன்னைய நாளான 10ஆம் திகதி நிகழ்வு ஏற்பாட்டுக்காக கூடிய கலைப்பீட இரண்டாம் வருட மாணவர்கள் மது போதையில் சிரேஸ்ட மாணவ ஆலோசகர்கள், துறைத்தலைவர்கள், விரிவுரையாளர்களை நோக்கி தகாத வார்த்தை பிரயோகங்களை பிரயோகித்து அநாகரிகமான முறையில் ஈடுபட்டிருந்தனர்.

இவ்வாறு பல்வேறு அவமரியாதையான செயற்பாடுகளில் ஈடுபட்ட மாணவர்கள் அன்றைய தினம் விஞ்ஞான பீடத்தின் பல இலட்சக்கணக்கான ரூபா பெறுமதியான ஆபத்து விளைவிக்ககூடிய இரசாயன பொருட்கள் இருப்பதை பொருட்படுத்தாமலும் அவ் பீடத்தின் கண்ணாடிகள் ஜன்னல்களை அடித்துடைத்து அட்டகாசம் புரிந்திருந்தனர்.

இச் செயற்பாடுகளை அடுத்து புதுமுக மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வுக்கான அனுமதியை இரத்துசெய்து அதற்கான அறிவுறுத்தல்களை கலைப்பீட மாணவர் ஒன்றிய நிர்வாகக் குழிவினருக்கு உரிய முறையில் அறிவிப்பு வழங்கப்பட்டது.

மேற்படி அறிவுறுத்தல்களையும் மதிக்காது கலைப்பீட இரண்டாம் வருட மாணவரகள் புதுமுக மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வை நடாத்த முற்பட்டிருந்தனர்.

இதனால் பல்வேறு குழப்பகரமான நிலமைகள் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் பல்கலைகழக விதிகளை மீறியும், நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களை புறந்தள்ளியும், செயற்பட்ட கலைப்பீட மாணவர் ஒன்றியத்தை தற்காலிகமாக இடை நிறுத்துவதற்கான நடவடிக்கை துனைவேந்தரால் விடுக்கப்பட்டது.

இவற்றை தொடர்ந்து மேற்படி சம்பவங்களால் பாதிக்கப்பட்ட விரிவுராயாளர்கள், மாணவ ஆலோசகர்களால் வழங்கப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து 14.03.2017 ஒழுக்காற்று விசாரனை குழு அமைக்கப்பட்டது.

இவ் ஒழுக்காற்று குழுவானது மேற்கொண்ட விசாரனைகளினூடாக 27.03.2017 அன்று துனைவேந்தரிடம் அறிக்கையொன்றை சமர்பித்திருந்தது.

இதில் முகத்தோற்றமளவில் இனங்காணப்பட்ட 13கலைப்பீட மாணவர்கள் உள்ளடங்களாக 15 மாணவர்களுக்கு தற்காலிக வகுப்புத்தடை விதிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளமாயானது முழு விசாரனையும் நடைபெற்று முடியும் வரை தற்காலிக இடைக்கால நடவடிக்கையாகும்.

இது அனைத்து பல்கலைகழகங்களாலும் பின்பற்றப்படுகின்ற ஒழுக்க உப விதிகளின்படியும் இயற்கை நீதி தத்துவங்களிற்கு உட்பட்டதுமான நடவடிக்கையாகும்.

எனினும் மாணவர்கள் தற்போது தாம் இழைத்த தவறுகளுக்கு வருத்தம் தெரிவிக்காமலும், அவற்றை மூடி மறைத்தும் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளதுடன் எனைய மாணவர்களின் கல்விச் செயற்பாட்டையும் முடக்கி வைத்துள்ளனர்.

இவ்வாறானதொரு நிலையிலேயே குறித்த மாணவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தற்காலிக வகுப்புத்தடையை ஒழுக்காற்று விசாரனையின் முழுமையான அறிக்கை வெளிவரும் வரையில் அவ் தற்காலிக வகுப்புத்தடையை இடைநிறுத்துமாறு கலைப்பீட சபையானது பல்கலைகழக துனைவேந்தருக்கு பரிந்துரை செய்துள்ளது.

அத்துடன் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தையும் தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள 13கலைப்பீட மாணவர்களையும் தவிர்த்து எனையவர்களை கொண்டு தொடர்ந்து இயக்குவதற்கும் தாம் யாழ்.பல்கலைகழக துணைவேந்தருக்கு பரிந்துரை செய்துள்ளதாக யாழ்.பலைகழக கலைப்பீடாதிபதி க.சுதாகரன் தெரிவித்துள்ளார்.