தனமல்வில பிரதேசத்தில் தந்தை மற்றும் மகனை இனந்தெரியாத இரு நபர்கள் கூரிய ஆயுதங்கள் மற்றும் இரும்பு கம்பியால் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (26) இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் 15 வயதுடைய சிறுவன் மற்றும் 56 வயதுடைய தந்தையாவார்.
இவர்கள் காயமடைந்த நிலையில் தனமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தந்தை மேலதிக சிகிச்சைக்காக அம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் மற்றொருவர் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தனமல்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

