போதைப்பொருள் மாபியாக்களிற்கு எதிரான நடவடிக்கை ஒரு அரசியல் நாடகமாக மாறக்கூடாது

140 0

யுக்திய நடவடிக்கையை ஒரு நாடகம் என வர்ணித்துள்ள சட்டத்தரணி நுவான் பொபகே இவ்வாறான நடவடிக்கைகள் இறுதியில் பொலிஸாரின் ஈவிரக்கமற்ற நடவடிக்களிற்கும் என்கவுண்டர்களிற்கும் வழிவகுக்கலாம் என தெரிவித்துள்ளார்

பேட்டியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஆகவே அரசியல் நிகழ்ச்சி நிரலும்  பக்கச்சார்பும் கொண்ட இவ்வாறான நடவடிக்கைகள் இறுதியில் பொதுமக்களின் உரிமைகளிற்கு  பாதிப்பை ஏற்படுத்துபவையாக மாறலாம் என  அவர் தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

 

தேசபந்து தென்னக்கோன் மூன்று மாதங்களிற்கு பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டார்.

அரசமைப்பு பேரவை ஜனாதிபதியின் எந்த நியமனத்தை அங்கீகரிக்கவேண்டும்.

இந்த நியமனத்திற்கு பின்னரே இந்த யுக்திய நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் தேசபந்து தென்னக்கோன் மேல்மாகாணத்திற்கான சிரேஸ்ட பொலிஸ் மாஅதிபராக பதவிவகித்தார் அவ்வேளை நாட்டின் போதைப்பொருள் மாபியாவிற்கு எதிராக அவசியமான என்ன நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு அவருக்கு பெரும் சந்தர்ப்பமிருந்தது,

ஆனால் அவ்வேளை  நடவடிக்கைகளில் ஈடுபடாமல் நியமனத்தின் பின்னர் அவர் புதிய நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார்

ஆகவே இது தொடர்பான எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால் இது ஒரு நாடகம் இதன் பின்னால் மறைமுக உள்நோக்கங்கள் உள்ளன.

அவரது நியமனத்தை அங்கீகரிப்பதற்கான அழுத்தத்தை அரசமைப்பு பேரவைக்கு கொடுக்க முயல்கின்றனர்.

மேலும் தேசபந்து தென்னக்கோனின் நியமனத்திற்கு பொதுமக்களின் ஆதரவை பெற முயல்கின்றனர்.

போதைப்பொருள் மாபியாவும் போதைப்பொருள் விடயமும்  இந்த நாட்டு மக்களை பொறுத்தவரை பாரதூரமான விடயம் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்,ஆகவே இதற்கு எதிராகநடவடிக்கை எடுக்கவேண்டும் ஆனால் இது ஒரு அரசியல் நாடகமாக அமையக்கூடாது.

இது நேர்மையான முயற்சியாக அமையவேண்டும் ஆகவே எனது தனிப்பட்ட கரிசனை என்னவென்றால் இவ்;வாறான நடவடிக்கைகளின் போது நீங்கள் பொதுமக்களின் உரிமைகளை மீற முடியாது,

இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஒழுங்கமைக்கப்பட்ட முறைகள் உள்ளன

இலங்கையின் வரலாறு முழுவதும் சட்டத்திற்கு புறம்பான கொலைகைளை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம்,பொலிஸாரின்ஈவிரக்கமற்ற நடவடிக்கைகள் சித்திரவதைகள் போன்றவற்றை பார்த்துள்ளோம்.

ஆகவே இவ்வாறான செயற்பாடுகள் அனைத்தும் இடம்பெறலாம்.

மிகவும் முக்கியமான விடயம் என்னவென்றால் அது பொதுமக்களின் அடிப்படைஉரிமை.

நீங்கள் சட்டத்திற்கு விரோதமான படுகொலைகள் – சித்திரவதைகளை நியாயப்படுத்த முடியாது.

ஆகவே அரசியல் நிகழ்ச்சி நிரலும்  பக்கச்சார்பும் கொண்ட இவ்வாறான நடவடிக்கைகள் இறுதியில் பொதுமக்களின் உரிமைகளிற்கு  பாதிப்பை ஏற்படுத்துபவையாக மாறலாம்.

 

கேள்வி – சித்திரவதையிலிருந்து விடுதலை என்பதுஅரசமைப்பில் உறுதிசெய்யப்பட்டுள்ள  ஒன்று- ஆனால பல தரப்பினர் விடுத்துள்ள அறிக்கைகளின் படி மனித உரிமை ஆணைக்குழு – சர்வதேச மன்னிப்புச்சபை – இது இலங்கையில் ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது மனித உரிமை ஆணைக்குழுவும் அறிக்கையொன்றைவெளியிட்டுள்ளதுஏன் இந்த நிலை?

பதில்- ஆம் 1994 முதல் பல அறிக்கைகள் வெளியாகியுள்ளன.

2017 இல் பொலிஸாரின் ஈவிரக்கமற்ற நடவடிக்கைகள் என பல சம்பவங்கள் பதியப்பட்டதாக மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்திருந்தது.

பொலிஸாரின் ஈவிரக்கமற்ற செயற்பாடுகள் சித்திரவதைகள் குறைவடையவில்லை இந்த விடயத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை மாறாக அவை அதிகரித்துள்ளன.

ஏன் இவை இடம்பெற்றுள்ளன என்றால் சில வேளைகளில் அரசியல்வாதிகள்  இவற்றை நியாயப்படுத்தியுள்ளனர்.

2020 இல் உள்துறை அமைச்சர் பொலிஸாரின் இவ்வாறான நடவடிக்கைகளை நியாயப்படுத்தினார்.

சமீபத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் பொலிஸாரின் ஈவிரக்கமற்ற நடவடிக்கைகளை நியாயப்படுத்தியுள்ளார்.

ஆகவே அரசியல் ஆதரவு நிறைவேற்று அதிகாரத்தின் ஆதரவு காணப்பட்டால் -.; இது ஆபத்தான நடவடிக்கையாக மாறலாம் பொதுமக்கள் இதற்கு பலியாவார்கள்.

பொலிஸரின் நடவடிக்கைகளிற்கு எதிரான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகள் உள்ளன – பாதிக்கப்பட்டவர்களிற்கு நஸ்ட ஈடு குறித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.