மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறைக் கைதிகளின் உடல்நிலையில் முன்னேற்றம்!

108 0

மூளைக் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாத்தறை சிறைக் கைதிகளின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மாத்தறை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் உபாலி கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த 22 ஆம் திகதி  (22) எட்டு நோயாளிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  அவர்களில் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் 23 ஆம் திகதி  மேலும் ஒன்பது நோயாளிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்ட  மூவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு   சிகிச்சையளிக்கப்பட்டதாக  வைத்தியர்  உபாலி கருணாரத்ன தெரிவித்தார்.

இந்த நோயாளர்களுக்கு வாந்தி, வயிற்று வலி, தலைவலி, வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டதாகவும் நோயாளிகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துக்கு  அனுப்பி வைக்கப்பட்டு அவற்றின்  முடிவுகள் எதிர்பார்க்கப்படுவதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் உபாலி கருணாரத்ன தெரிவித்தார்.