அம்பாறையில் போதைப்பொருள் விநியோகிக்கும் பிரதான நபர் கைது!

113 0
அம்பாறை பிரதேசத்துக்கு போதைப்பொருள் விநியோகித்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நகரில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை நகருக்கு ஐஸ் கொண்டு வந்து விநியோகம் செய்யும் பிரதான சந்தேக நபராக  இவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.