கடந்த மூன்று மாதங்களில் மின்சாரத்தை பயன்படுத்தாத 30,000 வாடிக்கையாளர்கள் இருப்பதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த இணைப்புகளில் வீடுகளும் வர்த்தக நிறுவனங்களும் அடங்குவதாக அவர் கூறினார்.
இவர்களில் வெளிநாடுகளுக்குச் சென்ற மின்சார பாவனையாளர்களும், மற்றொரு பிரிவினர் வசிப்பிடத்தை மாற்றியவர்களும் அடங்குவதாக அமைச்சர் தெரிவித்தார்.

