நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) அப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவரின் வீட்டை சோதனையிட்ட போது வீட்டின் குளியலறையில் இருபத்தி நான்கு இலட்சத்து பதினேழாயிரம் மில்லிலீற்றர் கோடா, 06 கோடா பீப்பாய்கள், எரிவாயு அடுப்பு, எரிவாயு தாங்கி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இங்கு தயாரிக்கப்படும் கசிப்பு வகைகள் கிரிபத்கொடை மற்றும் பியகம பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

