சட்டவிரோத மின்சாரக் கம்பியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு !

168 0
பதுளை  – அம்பகஸ்தோவ, தங்கமுவ பிரதேசத்தில் சட்டவிரோத மின்சார கம்பியில் சிக்கி ஒருவர் இன்று  திங்கட்கிழமை (25)  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் அம்பகஸ்தோவ – தங்கமுவ, மிரிஸ்வத்தை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர்  என பொலிஸார் தெரிவித்தனர்.

போஞ்சி பயிரிடப்பட்ட தோட்டத்திற்கு வரும் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக அதன் உரிமையாளரால் சட்டவிரோதமாக போடப்பட்ட மின்சார கம்பியில் சிக்கியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில்  35 வயதுடைய போஞ்சி தோட்ட உரிமையாளர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்  மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில்  மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.