சூப்செய்ய அழிக்கபடும் மலைக்குருவிகள்

335 0

இலங்கையில் பல உயிரினங்கள் அழிவடைந்து வருகின்றன.

அந்த வகையில் மலையகப்பிரதேசங்களில் மட்டும் அதிகமாகக் காணப்படும் மலைக்குருவி இனமானது மிகவும் பெறுமதி வாய்ந்தது என்பதால் இதற்கான கேள்விகள் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளிடம் அதிகம் நிலவுகின்றது.

இலங்கையில் உள்ள முக்கியமான ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் குறித்த மலைக்குருவிகளின் கூடுகளால் செய்யப்படும் சூப்வகைகளுக்கு அதிகம் கிராக்கி நிலவுவதால் மலையகத்தில் உள்ள மலைக்குருவிகளின் கூடுகள் உடைக்கப்பட்டு சட்டவிரோதமாக கடத்தப்படும் செயற்பாடு தற்போது பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எனவே இந்தக் குருவிக்கூடுகள் அருகிவரும் நிலையில் உள்ளதாலும், இவற்றின் கூடுகள் விலைமதிப்பற்றது என்பதாலும் இவற்றை பாதுகாக்க சுற்றாடல் ஆர்வலர்கள் முன்வரவேண்டும் என கோரப்படுகிறது.