வடமேற்கு கடற்படை கட்டளைப் பிரிவுக்குச் சொந்தமான கடற்படை கப்பலான தம்பபன்னி, நுரைச்சோலை பகுதியில் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையில், நுரைச்சோலை பொருளாதார நிலையத்துக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்று சோதனையிடப்பட்டபோதே கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் லொறி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

