வத்தளை, எலகந்தயில் ஒருவர் வெட்டிக் கொலை : சந்தேக நபர் கைது!

122 0

தொலைபேசி தரவுகளை பகுப்பாய்வு செய்ததன் மூலம் கொலைச் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த மாதம் 28ஆம் திகதி வத்தளை எலகந்த பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஒருவர்   கூரிய ஆயுதங்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த வத்தளை பொலிஸார் சந்தேக நபரை நேற்று (23) கைது செய்துள்ளனர்.

தொலைபேசி தரவு பகுப்பாய்வு அறிக்கைகள் மூலம் சந்தேக நபர் பற்றிய தகவல்களை உறுதிப்படுத்திய பின்னரே, கொழும்பு 15 பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரை சோதனையிட்டபோது, அவரிடம்   ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.