கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொரட்டுவை உயன பிரதேசத்தை சேர்ந்த 59 வயதுடையவர் என மொரட்டுவ பொலிஸார் தெரிவித்தனர் .
கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இத்தொழிற்சாலையிலிருந்து ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான 58 மதுப் போத்தல்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட மதுபானங்கள் , இரண்டு வெற்று போத்தல்கள், விளம்பர பதாகைகள் போன்றவற்றை கலால் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது மது தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகின்ற மதுபானங்களை விற்பனை செய்வதற்கான இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ஓடர்களை பெற்று சில காலமாக பாரிய அளவில் இந்த மது தொழிற்சாலை இயங்கி வருவதாகவும் தெரியவந்துள்ளது .
அத்துடன் பண்டிகை காலத்தை இலக்காகக் கொண்டு ஏனைய காலங்களை விட அதிகளவில் மது உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும், சமூக ஊடகங்களில் QR குறியீடுகளை பயன்படுத்தி மிக அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த சட்டவிரோத மது தொழிற்சாலைக்கு வர்த்தக உரிமம் வழங்க மொரட்டுவ மாநகர சபை ஏற்பாடு செய்துள்ளதுடன் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற விற்பனைக் கண்காட்சிகளிலும் இந்த சட்டவிரோத மது பானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மொரட்டுவை உயன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

