சீனத்துறைமுகத்தில் இந்தியப் பிரஜை ஒருவர் கைது

234 0

வீசா இன்று நாட்டில் தங்கியிருந்த வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் சீனத்துறைமுகம், கப்பல்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சீனத்துறைமுக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

33 வயதுடைய இந்தியப் பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன் சீனத்துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.