அறிய வைகை பறவை இனங்களில் ஒன்றான மலைக்குருவியை சட்டவிரோதமாக விற்பனை செய்தவரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, ஹட்டன் டிக்கோயா பிரதேசத்திலுள்ள வீடொன்றை சுற்றிவளைத்த போதே விற்பனைக்காக மலைக்குருவியை வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டார்.
ஹட்டன் சிங்கமலை புகையிரத சுரங்கப்பாதையில் வாழ்ந்த மலைக்குருவியினமே இவ்வா று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

