போதகர் ஜெரோம் தாக்கல் செய்த மனுவை நிராகரிக்குமாறு சட்ட மா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரிக்கை!

136 0

மதங்களை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் தம்மை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் பிறப்பித்த உத்தரவை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி  போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனுவை நிராகரிக்குமாறு சட்ட மா அதிபர் நேற்று (18)  மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆரம்ப ஆட்சேபனைகளை முன்வைத்தபோது இந்தக் கோரிக்கையை  விடுத்தார்.

பூர்வாங்க ஆட்சேபனைகள் மீதான உத்தரவு இம்மாதம் 20ஆம் திகதி அறிவிக்கப்படும் எனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவினால் முன்வைக்கப்பட்ட மனு அழைக்கப்பட்டபோது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஷமிந்த விக்கிரம இந்த ஆரம்ப ஆட்சேபனைகளை முன்வைத்தார்.