அரசியலிலிருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை!

142 0

அரசியலிலிருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். ஒவ்வொரு கட்சியும் மாநாடுகளை நடத்த வேண்டும் என்றும், அதன் மூலம் கட்சியின் பலத்தைக் காட்ட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பெரும்பான்மையான மக்கள் தமது கட்சியுடன் திரண்டுள்ளதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, சில மாற்றங்கள் ஏற்பட்டாலும் மக்கள் எமது கட்சியை  விட்டு நகரவில்லை என்பதை கட்சி மாநாடு நிரூபித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தகுதி தனக்கு இல்லை என்றும், கட்சியைச் நேர்ந்த யாராக இருந்தாலும் வெற்றிபெற ராஜபக்ஷக்கள் பாடுபடுவார்கள் என்றும்  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன   ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவது தொடர்பில் தனக்கு தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.