களனி பல்கலைக்கழகத்தில் மூடப்பட்டுள்ள ஏனைய பீடங்களின் கற்கைகள் நாளை திங்கட்கிழமை (18) முதல் மீள ஆரம்பிக்கப்படும் என உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, மனிதவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீடங்களின் கற்கைகள் இவ்வாறு மீள திறக்கப்படவுள்ளதாக உபவேந்தர் தெரிவித்தார்.
பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவரை தாக்கிய சம்பவத்தினால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக களனி பல்கலைக்கழகம் கடந்த 5ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக தற்காலிகமாக மூடப்பட்டது.

