ஏப்ரல் 30 வரை முட்டை இறக்குமதி

124 0

எதிர்வரும் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதி வரை முட்டை இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரச வணிகக்கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

சந்தையில் முட்டையின் விலை சடுதியாக உயர்வடைந்ததன் காரணமாக உணவுக் கொள்கைக்கான குழு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

இதற்கமைய, தொடர்ச்சியாக முட்டையை இறக்குமதி செய்து உள்நாட்டு சந்தைக்கு விநியோகிக்கவுள்ளதாக அரச வணிகக்கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை, சதொச, பேக்கரிகள், ஹோட்டல்களுக்கு 10 மில்லியன் முட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச வணிகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.