ஜேர்மனியில் விமானக் கட்டணம் முதல் ஷாம்பூ விலை வரை: 2024இல் உயர இருக்கும் விலைவாசி

151 0

2024இல் ஜேர்மனியில் விலைவாசி மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், என்னென்ன பொருட்களின் விலைகள் உயர உள்ளது என்று பார்க்கலாம்.

விமானக் கட்டணம்

உள்ளூர் விமானங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருளின் விலை மீது வரிவிதிப்பு செய்ய ஜேர்மன் அரசு திட்டமிட்டுவருவதால், உள்ளூர் விமானக் கட்டணம் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹொட்டல்களில் சாப்பிடும் கட்டணம்

கோவிட் காலகட்டத்தில் உணவகத்துறைக்கு உதவுவதற்காக மதிப்புக் கூட்டு வரி 7 சதவிகிதமாக ஆக்கப்பட்டது. 2024 ஜனவரியிலிருந்து அது மீண்டும் 19 சதவிகிதமாக உயர்த்தப்பட உள்ளதால் உணவக உரிமையாளர்கள், அதைக் காரணம் காட்டி உணவு வகைகளின் விலையை உயர்த்த வாய்ப்புள்ளது.

விமானக் கட்டணம் முதல் ஷாம்பூ விலை வரை: 2024இல் உயர இருக்கும் விலைவாசி | Prices Likely To Rise In 2024 In Germany

மளிகை முதலான வீட்டு உபயோகப் பொருட்கள் விலை

ஒருமுறை பயன்படுத்திவிட்டு வீசியெறியும் பிளாஸ்டிக் பொருட்களின் விலையை அரசு உயர்த்த திட்டமிட்டுள்ளதால், பிளாஸ்டிக் பேப்பரில் பொதிந்து விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலை கணிசமாக உயர இருக்கிறது.

ஆக, மளிகை மற்றும் ஷாம்பூ போன்ற அன்றாட உபயோகப் பொருட்கள் விலை உயர்வு தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை

தனது பருவநிலை பாதுகாப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்குவதற்காக அரசு கார்பன்டை ஆக்சைடு வரியை ஒரு டன்னுக்கு 30 யூரோக்களிலிருந்து 45 யூரோக்களாக உயர்த்த உள்ளது.

 

விமானக் கட்டணம் முதல் ஷாம்பூ விலை வரை: 2024இல் உயர இருக்கும் விலைவாசி | Prices Likely To Rise In 2024 In Germany

இதனால், ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள கட்டணங்களுடன் கூடுதலாக பெட்ரோல் விலையில் லிற்றருக்கு 1.4 சென்ட்கள் அதிகரிக்கும். மொத்த 15 யூரோக்கள் கணக்கையும் சேர்க்கும்போது 2023ஐ விட பெட்ரோல் விலை 4.3 சென்ட்கள் அதிகரிக்க உள்ளது.

வெப்பப்படுத்துதல் மற்றும் மின்கட்டணம்

இதே கார்பன்டை ஆக்சைடு வரி உயர்வு காரணமாக வெப்பப்படுத்துதல் மற்றும் மின்கட்டணங்களும் உயர இருக்கின்றன.

இவை போக, மின்சார கார்கள் மற்றும் சோலார் பேனல் பயன்படுத்துவோருக்கும் செலவு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டீசல் விலையும் லிற்றருக்கு 4.7 சென்ட்கள் அதிகரிக்க உள்ளது.