சூறாவளியில் சிக்கிய கிளிநொச்சி பெரியகுளம் கிராமம்!

118 0
கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பெரியகுளம் கிராமமானது நேற்று வியாழக்கிழமை (14) சூறாவளி பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதுடன் அப்பகுதி மக்களின் வாழ்வாதார பயிரான தென்னை,வாழை போன்ற பயன் தரு மரங்களையும் சூறையாடி சென்றுள்ளது.

மேலும், சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான நீர் நிலையான இரணைமடு குளத்தின் வான் கதவுகளும் அதிகாலை திறக்கப்பட்ட நிலையில் கண்டாவளை மற்றும் பெரியகுளம் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்த்துள்ளதுடன் விவசாய நிலங்களும் நீரில் மூழ்கியுள்ளன.