கஜமுத்துக்களுடன் இராணுவத்திலிருந்து தப்பிய இருவர் உள்ளிட்ட நால்வர் கைது

121 0

இரண்டு கோடி ரூபா பெறுமதியான கஜ முத்துக்களை விற்பனை செய்ய முயன்ற நான்கு சந்தேக நபர்கள் சீதுவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (14) இரவு இடம்பெற்றுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்கள் இமதுவை , வெலிஓயா, பளுகஸ்வெவ மற்றும் பன்னிப்பிட்டிய ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

இவர்களில் இருவர் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர்கள் என விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

 

பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வர்த்தகர்களாக வேடம் கொண்ட பொலிஸாரால் சந்தேக நபர்கள் சீதுவை பகுதிக்கு அழைத்துவரப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சோதனையில் இரண்டு கோடி ரூபா பெறுமதியான 4 கஜ முத்துக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்டவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (15) நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.