காலி – பலப்பிட்டிய பாலத்திற்கு அருகிலுள்ள முகத்துவாரக் கடலில் நீராடிய மாணவன் காணாமல்போயுள்ளதாக அஹுங்கல பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல்போனவர் கொட்டாவ மத்தேகொட பிரதேசத்தை சேர்ந்த 13 வயதுடைய பாடசாலை மாணவனாவார்.
இவர் தனது பெற்றோருடன் பலப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள தனது தாத்தா , பாட்டியை பார்க்கச் சென்ற நிலையில் தனது சக நண்பர்களுடன் முகத்துவாரக் கடலில் நீராடிக் கொண்டிருந்த போதே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
காணாமல்போன மாணவனை தேடும் பணியில் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.

