கரடியினாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஷார ஹேமச்சந்திரனின் தலைமையின் கீழ் பேரில் போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எச் எம் சியாம் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் குழுவினர் வியாழன் மாலை 3 மணியளவில் குறித்த சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
தற்போது சந்திவெளி மற்றும் சித்தாண்டி பிரதேசங்களை சேர்ந்த 24 மற்றும் 25 வயதுடைய இரண்டு இளைஞர்கள் 8 பரள்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கோடா மற்றும் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகம் நபர்கள் நாளை ஒரு சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். கரடியனாறு பொலிஸார் இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடத்தி வருகின்றனர் .

மட்டக்களப்பு கரடியினாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம் பஞ்சுமரத்தடி காட்டு பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போது எட்டு பாரிய பரல்களில் கசிப்பு மற்றும் கோடாவுடன் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கரடியினாறு பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எச்.எம். சியாம் தெரிவித்தார்.