வெள்ளத்தினால் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை பயண வழிகளில் மாற்றம்

114 0
நாட்டில் பெய்து வரும் கன மழை காரணமாக அதிவேக நெடுஞ்சாலையின் சில பகுதிகளில் வெள்ள நிலைமை காணப்படுகிறது.

அதன்படி, வெள்ள நீர் நிரம்பியுள்ளதால் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொக்மாதுவ பகுதியில் காணப்படும் கனங்கே நோக்கிய வீதிக்கான இடமாற்ற எல்லையை கடந்து  அவ்வழியே வாகனங்கள்  பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதனால் கொழும்பிலிருந்து செல்லும் வாகனங்கள் பாலட்டுவ நோக்கிய இடமாற்று எல்லையூடாகவும், மத்தளவிலிருந்து செல்லும் வாகனங்கள் கொடகம பகுதிக்கான இடமாற்று எல்லையூடாகவும் வெளியேறிச் சென்று கனங்கே பிரதேசத்தை அடையலாம் என்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.