கைவிடப்பட்டிருந்த ஜப்பான் இலகு ரயில் சேவைத்திட்டம், இடை நிறுத்தப்பட்டிருந்த விமான நிலைய கட்டிட வேலைத்திட்டம் முதலானவை மீண்டும் ஆரம்பமாகவுள்ளன. சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியும் கிடைக்கும் . கட்டுமானத் தொழில் துறையில் ஈடுபட்டுள்ளோர் இதன் மூலம் பயனடைவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
எனவே, இத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் தொழில் கௌவரத்துடன் தமது தொழிலை அமைப்பு ரீதியில் மேம்படுத்திக்கொண்டால், இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் தொழிலாளர்களை உங்களது அங்கீகாரமின்றி அனுமதிக்க முடியாத நிலை ஏற்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இஸ்ரேலில் பத்தாயிரம் தொழில்வாய்ப்புகளுக்கு மேலதிகமாக கட்டுமானத்துறையில் புதிதாக 20 ஆயிரம் தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கவிருப்பதாகவும் ,இது தொடர்பான பேச்சுவார்த்தை இஸ்ரேலுடன் நடத்தப்பட்டுவருவதாகவும் அமைச்சர் குறிபிட்டார்.
முறைசாரா தொழில் துறையில் ஈடுபட்டுள்ளோரின் தொழில் கௌரவத்தை மேம்படுத்துவதற்கான ‘கரு சரு’ என்ற வேலைத்திட்டத்திற்கு பொது மக்ககளின் கருத்துக்களை கேட்டறிவிதற்கான தொடர் செயல் அமர்வின் 6 ஆவது அமர்வு இன்று (13) தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.
புதிய தொழில் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முறைசாரா தொழிலில் ஈடுபட்டுள்ள கைவினைஞர், தச்சுத் தொழிலாளர்கள் உள்ளிட்ட கட்டுமானத் தொழில் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் ‘கரு சரு’ திட்டத்தின் கீழ் தொழில் கௌரவத்தை பெற்றுக் கொடுப்பதற்கான கலந்துரையடலின் போதே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
வாக்குகளை குறிவைக்கும் கொள்கைகள் மாற்றப்பட்டன. அதனால்தான் இவ்வாறு மின்கட்டணம், வரி முதலானவை உயர்த்தப்பட்டது. அவை வாக்குகளுக்காக மிகவும் பொருத்தமற்ற முடிவுகள் தான். வெற் வரி, மின் கட்டண சுமைகளை தாங்கிக்கொள்ள முடியவில்லையென குறை கூறப்படுகிறது.இந்த நிலையில் இருந்து விடுபட்டு மக்கள் சுபீட்சமாக வாழுவதற்கான நடவடிக்கைகளை சமகால அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. கடந்த ஒன்றரை வருடமாக நாட்டின் கட்டுமானத்துறை பெரும் பின்னடைவைக் கண்டிருந்தது. இத்துறை தொழிலாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டிருந்தனர். அரசாங்கம் மேற்கொண்ட அபிவிருத்தித்திட்டம் காரணமாக நாடு இன்று வங்குரோத்து நிலையிலிருந்து படிப்படியாக மீண்டுவருகிறது.இதனால் மீண்டும் முதலீடுகள் நாட்டில் இடம்பெறும் என்றும் அமைச்சர் கூறினார்.
மாற்றங்கள் வேண்டி போராட்டங்கள் இடம்பெற்றதை குறிப்பிட்ட அமைச்சர், இதற்காக தலைகளை மாற்றுவதல்ல அரசில் ரீதியிலான பொருளாதார திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட வேண்டும்.இதற்கு வழிவகை செய்யும் வகையில் ஏற்ற பல சட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அரசு ஊழியர்களுக்கான நியமனம் நிறுத்தப்பட்டன. நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக பொருளாதாரம் புதிய பரிமாணத்தை நோக்கி நகர்ந்துள்ளது. அனைத்து துறைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
வெளிநாடுகளில் வரி விதித்தாலும் பொது மக்களுக்கு பாதிப்பு இல்லை என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இவற்றை ஒரேயடியாக மாற்ற முடியாது.உங்கள் வரிகள் அனைத்தும் வளர்ச்சிக்காக மட்டுமே செலவிடப்படுகிறது.
ஊழல், மோடி போன்றவற்றை தடுக்க புதிய சட்டங்கள் பெரிதும் உதவுவதோடு, மின் சக்தி திருத்தச்சட்டம் போன்ற பல சட்டங்கள் அடுத்த மாதம் கொண்டுவரப்படவுள்ளன. இவை மக்கள் மீதான பொருளாதார சுமையை குறைக்க உதவும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தொழில் புரிவோரில் 2.5 மில்லியன் பேர் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியங்களின் நன்மைகளை பெறுகின்றனர். இவர்கள் ஓய்வு காலத்தை அடைந்ததும் இவற்றின் மூலம் பயனடைகின்றனர்.இதே போன்றே அரசாங்த்தில் பணியாற்றும் சுமார் 15 இலட்சம் ஊழியர்கள் ஓய்வுதியத்தை பெறுகின்றனர். அதுமாத்திரமின்றி தனியார் துறை ஊழியர்கள் போன்று சேவைக்காலங்களில் காப்புறுதி, மகப்பேற்று நன்மைகள் முதலான நன்மைகளையும் பெறுகின்றனர். ஆனால் முறைசார தொழில் துறையில் ஈடுபட்டுள்ள கைவினைஞர் தச்சுத் தொழிலாளர்களான உங்களுக்கு இவை போன்ற வசதியும் இல்லை. கடினமான தொழிலை மேற்கொள்ளும் நீங்கள் விபத்துக்குள்ளானால் அதாவது, உங்கள் தொழிலின் போது கட்டிடத்தில் இருந்து வீழ்ந்தால், நீங்கள் பயன்படுத்தும் கூறிய ஆயுதத்தினால் பாதிக்கப்பட்டால் உங்களுக்கு உதவக்கூடிய காப்புறுதி வசதி மற்றும் இலப்பீட்டு நிலாரணத்தைக்கூட பெற்றுக்கொடுக்க எந்த ஏற்பாடும் இல்லை என்று சுட்டிக்காட்டிய அமைச்சர்,
தொழிலாளர்களுக்கு பொறுப்புக் கூறும் பொறுப்பு, தொழில் அமைச்சுக்கு உண்டு. இதனால் முறைசாரா தொழில் ஈடுபட்டுள்ள வீட்டுப்பணிப் பெண்கள், முச்சக்கர சாரதிகள் மற்றும் உங்களை போன்றோரின் நலன்கருதி, உங்களது தொழில் கண்ணியத்திற்கும் தொழில் ரீயிலான தர நிலைகளுக்குமான விடயங்களை புதிய தொழில் சட்டத்தில் தனிப்பிரிவாக உள்ளடக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளளோம். அமைப்ப ரீதியில் உங்களால் முன்வைக்கப்படும் தொழில் நலன் ஆலோசனைகளின் அடிப்படையில் இதற்கான நடவடிக்கையை தொழில் அமைச்சு மேற்கொள்ளும்.
உங்களது தொழிலுக்காக நீங்கள் பெறும் ஊதியம், வைத்தியர், பொறியியலாளர் பெறும் ஊதியத்திலும் பார்க்க அதிகமானது. இருப்பினும் தொழில் ரீதியிலான நன்மைகளுக்கான திட்டங்கள் எதுவம் உங்களுக்கென சட்ட ரீதியில் நடைமுறையில் இல்லை. இதனால் தொழிலின் போது எதிர் நோக்கும் விபத்து மற்றும் உங்களது ஓய்வு காலத்திற்கான நன்மைகளுக்கு இந்த புதிய முறை வழிவகை செய்யும்.
புதிய தொழில் பாதுகாப்பு திருத்தச்சட்ட மூல வரைவில் உள்ள குறை நிறைவுகளை கண்டறிந்து பிரதமர் எமக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்

இலங்கையின் வங்குரோத்து நிலை காரணமாக முதலீடுகளை இலங்கையில் மேற்கொள்ள விரும்பாத பல நிறுவனங்கள் விரைவில் மீண்டும் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளும். இதனால் வீழ்ச்சியடைந்துள்ள கட்டுமானத் துறை எதிர்வரும் சில மாதங்களில் புத்தெழுச்சி பெறும் என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.