போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் விளக்கமறியல் நீடிப்பு!

139 0

மதங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததால் பலத்த விமர்சனத்துக்கு உள்ளான  போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் விளக்கமறியல் இம்மாதம்  27ஆம்  திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று புதன்கிழமை (13)  கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்  இரண்டாவது நாளாக வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக சென்றிருந்தபோது இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டடிருந்தார்.