சக்விதி ரணசிங்கவுக்கும் அவரின் முன்னாள் மனைவிக்கும் அபராதம் விதிக்கப்பட்டது!

143 0
நிதி நிறுவன சட்டத்தை மீறி நிறுவனமொன்றை நடத்தி அதற்கு ஆதரவளித்த குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட ‘சக்விதி ரணசிங்க’ என்ற சந்தன வீரகுமார மற்றும் அவரது முன்னாள் மனைவி குமாரி அநுராதனி ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 18 இலட்சம் ரூபா  அபராதம் விதித்து உத்தரவிட்டது.

அபராதத் தொகையை செலுத்தாவிட்டால், 24 மாதங்கள் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

2006 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியின் அனுமதியின்றி நிதி நிறுவனம் ஒன்றை நடத்திய குற்றச்சாட்டின் கீழ் பிரதிவாதிகளுக்கு சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு செவ்வாய்க்கிழமை (12) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.