சஜித் பிரேமதாச நிரபராதி என்பதை ஏன் மறைக்கிறீர்கள்?

139 0

அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபச்வினால் நியமிக்கப்பட்ட காமினி எதிரிசிங்க, கோட்டாபய ஜயரத்ன,ஹரிகுப்த ரோஹணதீர உள்ளிட்ட குழுவை அமைத்ததோடு, ஹரிகுப்த ரோஹணதீர கோட்டாபய ராஜபக்சவின் நண்பரும் பிரதான சட்ட ஆலோசகர்களில் ஒருவரும் ஆவார் என்பதோடு 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராகவும் நிறுத்தப்பட்ட ஒருவராவார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் வெளிப்படுத்தினார்.

ஹரிகுப்த ரோஹணதீர தயாரித்த அறிக்கையில் தவறான முடிவுகள் மற்றும் சேறுபூசும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், பின்னர் அதை இலக்காகக் கொண்டு கோப் குழுவினதும் அமைச்சினதும் இனக்கப்பாட்டிற்கு ஏற்ப கலாசார நிதியத்தின் முறைகேடுகள் தொடர்பில் ஆராய நீதியரசர் வசந்த ஜினதாச தலைமையில் குழுவொன்றை நியமித்ததோடு, அந்த அறிக்கைகளில் எந்தவித மோசடியும் நடைபெறவில்லை என தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளதை அவர் வெளிக்கொணர்ந்தார்.

தனக்கு கிடைத்த அறிக்கைகளை இங்கு ஊடகவியலாளர்களிடம் வழங்கி வைத்ததோடு, சஜித் பிரேமதாச இங்கு குற்றமற்றவர் என்பது நிரூபனமாகுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அப்போதைய தனது பதவி காலத்தில் இந்த நிர்மானிகள்,அபிவிருத்திப் பணிகள் அனைத்தும்,அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் ஊடாகவே மேற்கொள்ளப்பட்டதாகவும்,இந்நாட்டின் சேவைக்காக 3.2 பில்லியனுக்கும் அதிகமாக செலவளிக்கப்பட்டுள்ளதாகவும்,

இந்நாட்டிலுள்ள அனைத்து மதங்களுக்கும், சகல சமய ஸ்தலங்களுக்கும் வழங்கப்பட்ட சேவைகளுக்கும்,உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் அழிவிற்குள்ளான மத ஸ்தலங்களை மீள புனரமைக்க என்றவாறே இந்த தொகை செலவளிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கைகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு இந்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வந்த சமய சேவைகள் தற்போது முடங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

அரசியல் பழிவாங்கும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் நற் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் விதமாக வெளியிடப்பட்ட மத்திய கலாசார நிதிய நிதி மோசடி விடயத்தில் தான் நிரபராதி என்ற அறிக்கைகளை ஹன்சார்ட் பதிவிடாமல் மூடி மறைப்பது குறித்தும் தான் தனது கண்டனத்தைத் தெரிவிப்பதாகவும் அவர் இங்கு மேலும் குறிப்பிட்டார்.