களனி பல்கலையின் 03 பீடங்களும் இன்று மீள திறப்பு

116 0

களனி பல்கலைக்கழகத்தில் மூடப்பட்டிருந்த 03 பீடங்களின் கல்வி நடவடிக்கைகளும் இன்று மீள ஆரம்பமாகவுள்ளன.

அதற்கமைய, வர்த்தகம் மற்றும் முகாமைத்துவ பீடம், விஞ்ஞான பீடம், கணினி மற்றும் தொழில்நுட்ப பீடம் என்பவற்றின் கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.

பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதலை நடத்தியமை, மேலும் இரு அதிகாரிகளை கடத்திச்சென்று தடுத்து வைத்திருந்தமை தொடர்பான சம்பவங்கள் பதிவானதை அடுத்து இந்த 04 பீடங்களின் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டது.