மாத்தறை கல்பவின் பெண் சகா குடு தனு வெல்லம்பிட்டியில் கைது!

109 0
வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள குடு தனு என்று   அழைக்கப்படும் பிரபல போதைப்பொருள் வியாபாரியும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான மாத்தறை கல்ப என்ற பெண்ணின் சகாவான  இந்நாட்டில் போதைப்பொருள் வர்த்தகத்தை நடத்தும் குடு தனு என்ற பெண் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படை தலைமையக முகாமின்  (கொழும்பு பிராந்தியம்)  விசேட சுற்றிவளைப்பு பிரிவினர் நேற்று புதன்கிழமை (06) வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குடாபுத்கமுவ, அங்கொட பிரதேசத்தில் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

இதன்போதே தற்போது வெளிநாட்டில் மறைந்துள்ள பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான மாத்தறை கல்பாவின் சாகவான  இந்த நாட்டில் போதைப்பொருள் கடத்தலுக்கு தலைமை தாங்கும்  வசந்த குமார தனுஷிகா அல்லது குடு தனு என்பவர் கைது செய்யப்பட்டு 1 கிலோ 50 கிராம் ஐஸ் போதைப்பொருள், இலத்திரனியல் தராசு, கடத்தல் மூலம் சம்பாதித்ததாக நம்பப்படும்  12,000 ரூபா பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பனவும் கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபரான பெண் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.