வீடுகளில் கொள்ளையிட்டோர் தொடர்பில் பொது மக்களிடம் தகவல் கோரும் பொலிஸார்

117 0

புத்தளம் – நுரைச்சோலை பிரதேசத்தில் வீடுகளை உடைத்து கொள்ளையிட்ட  சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் தலைமறைவாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் அண்மையில் புத்தளம் – நாவக்காடு பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றை உடைத்து வீட்டு உரிமையாளர்களை அச்சுறுத்தி தங்க நகைகள் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இவர்கள் கொள்ளியிட்ட நகைகள் மற்றும் பொருட்களின் மொத்த பெறுமதி 1 கோடியே 52 இலட்சத்து 32 ஆயிரம் ரூபாய் என பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர்களின் முறைப்பாடுகளின் அடிப்படையில் குற்றப் பதிவுப் பிரிவின் கலைஞர் ஒருவரால் சந்தேக நபர்கள் இருவரதும் வரைப்படங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இவர்கள் தொடர்பில் தகவல் கிடைத்தால் 071 859 1289 , 071 859 1301 மற்றும் 071 859 2126 என்ற இலக்கங்களுக்கு உடனடியாக தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.