முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விசேட வேலைத்திட்டம்

76 0

எமது எதிர்கால சிறார்களினது நலன்களை கருத்திற் கொண்டு முன்பள்ளி ஆசிரியர்களின் ஆற்றல்கள் மேம்படுத்தப்பட்டு அவர்களது சேவைகள் மேலும் விரிவுபடுத்தப் பட்டும்அவர்களைபொருளாதார ரீதியிலும் வலுப்பெற நடவடிக்கை மேற்கொள்ள முயற்சிகள் எடுக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட வடக்கு வலையத்தை சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்களுடன் நேற்றுமுன்தினம்(03) இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.தொடர்ச்சியாக பலதரப்பட்ட மக்களை சந்தித்து அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து வரும் நிலையில் கிளிநொச்சி மாவட்ட வடக்கு வலையத்தை சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

குறித்த கலந்துரையாடலின், நாம் நீண்ட காலமாக முன்பள்ளிச் சிறார்களின் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்திருக்கும் நிலையில் மிக குறுகிய வேதனத்துடன் பணியாற்றி வருவதாகவும் இதனால் நாம் குடும்ப சூழ்நிலையில் பல்வேறு அசௌகரியங்களையும் எதிர்கொண்டுவருவதாகவும் தமக்கான கொடுப்பணவை முடிந்தளவு பெற்றுத்தந்தது உதவுமாறு முன்பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.